நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு
நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுபோல தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களையும் நீதிபதிகள் ஒன்றாக விசாரித்தனர். இதுகுறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு ஒலிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக உட்கட்சிப் பூசல் தொடர்பாக நேபாள நாடாளுமன்றத்தை பிரதமர் ஒலி கடந்த ஞாயிற்றுக்கிழமை கலைத்தது குறிப்பிடத்தக்கது.
Comments