தமிழ்நாட்டில் மேலும் 1,027 பேருக்கு கொரோனா உறுதி... 24 மணி நேரத்தில் 1,103 பேர் குணம்; 12 பேர் உயிரிழப்பு

0 3729
தமிழ்நாட்டில் மேலும் 1,027 பேருக்கு கொரோனா உறுதி... 24 மணி நேரத்தில் 1,103 பேர் குணம்; 12 பேர் உயிரிழப்பு

மிழ்நாட்டில், புதிதாக 1,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற 1,103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 12 பேர் உயிரிழந்தனர்.

29 மாவட்டங்களில் கொரோனா பலி பதிவாகவில்லை. கொரோனா இல்லாத மாவட்டம் என்ற பட்டியலில், கள்ளக்குறிச்சி இணைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 - வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

சென்னையில் 292 பேர், புதிதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 129 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments