தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? - செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுப்பு

0 2857
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? - செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார்.

முன்னதாக புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு போன்ற புத்தகங்களை மேடையில் பிரகாஷ் ஜவடேகர் அறிமுகம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments