விவசாயிகளை தவறாக வழிநடத்துபவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் - அமைச்சர் நரேந்திரசிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை தவறாக வழிநடத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் நீண்ட நாட்களாக தொடரும் போராட்டத்தை முடித்துக் கொண்டு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
விவசாயிகளுக்கு ஊக்க நிதியாக இதுவரை 96 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய வழங்கி இருப்பதை தோமர் சுட்டிக்காட்டினார்.
Comments