நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

0 4348
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தாம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய பழனி என்பவர் அவசியமில்லாமல் அவசரப்பணிகளை மேற்கொள்வதற்காக 83,920 ரூபாய் பயன்படுத்திய விவகாரத்தில், அவரது ஓய்வூதியத்தில் மாதந்தோறும் 200 ரூபாய் பிடித்தம் செய்யும் துறைசார்ந்த உத்தரவை நீதிபதி எஸ். வைத்தியநாதன் ரத்து செய்தார்.

விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்த்து அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்திற்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தபோதும் அதை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை எனவும், நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைக்கும் அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவியை பறிக்க வேண்டுமெனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படியாமல் இருப்பது கடமை தவறுவதற்கு சமமானது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments