வேளாண் சட்டம் : குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் பேசுவதில் தர்க்க ரீதியான பொருளில்லை என மத்திய அரசு கருத்து

0 1402
வேளாண் சட்டம் : குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் பேசுவதில் தர்க்க ரீதியான பொருளில்லை என மத்திய அரசு கருத்து

வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையையும் கொண்டு வருவது தர்க்க ரீதியான பொருளில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதக்காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திக்ரி என்னுமிடத்தில் விவசாயிகளுக்கு அன்றாடத் தேவைப்பொருட்களை இலவசமாக வழங்குவதற்குக் கால்சா எய்ட் சார்பில் ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது.

சட்டத் திருத்தம் என்பதை ஏற்கப்போவதில்லை என்பதால் அதைப் பேசுபொருளாக வைக்க வேண்டாம் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பேச்சில் தங்களுக்கு உடன்பாடு இல்லாததுபோல் காட்ட மத்திய அரசு முயல்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மீண்டும் பேச்சு நடத்த நாள் குறிக்கும்படி விவசாய சங்கங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments