அருணாசலப்பிரதேசத்தில் பாஜகவுக்குத் தாவிய 7 எம்எல்ஏக்கள்

0 2266
அருணாசலப் பிரதேசத்தில் பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் பாஜகவில் சேர்ந்ததால், சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 48 ஆக அதிகரித்துள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் பாஜகவில் சேர்ந்ததால், சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 48 ஆக அதிகரித்துள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாசலப் பிரதேசச் சட்டமன்றத்துக்குக் கடந்த ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் பாஜக 41 தொகுதிகளைக் கைப்பற்றியது.

7 தொகுதிகளை வென்ற ஐக்கிய ஜனதாதளம் இரண்டாமிடம் பெற்றது. இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்களும், அருணாச்சல் மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர். இதனால் அருணாச்சல் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 48ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments