காவிரி குண்டாறு இணைப்புத் திட்டப்பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளன

0 2395
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டப்பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளன

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட்டு திட்டப்பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளன.

காவிரி முதல் குண்டாறு வரை 259 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட உள்ளது.

முதல் கட்டமாக 6 ஆயிரத்து 941 கோடி ரூபாய் செலவில் காவிரி முதல் வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

மேலும் வைகை குண்டாறு இணைப்புப் பணிகளும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கரூர், ராமநாதபுரம், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர்த் தேவை பூர்த்தியாக வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments