கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவுப் பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவுப் பிரார்த்தனை நடைபெற்றது. திருப்பலி நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இயேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை சாந்தோம் பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்து.
சென்னை பெசன்ட்நகர் புனித வேளாங்கண்ணி ஆலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டபின், குடிலில் குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
இதேபோன்று, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், சேலம் குழந்தை ஏசு தேவாலயம், கோவை மைக்கேல் ஆதித்தூதர் பேராலயம், குமரி மாவட்டம் கோட்டார் சவேரியார் பேராலயம் ஆகிய இடங்களிலும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
Comments