இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள 6 ஆயிரம் பயணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள 6 ஆயிரம் பயணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை இந்தியா வந்தவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை அதிகாரிகள் முடுக்கி விட்டனர். இதுவரை நான்கு விமானங்களில் வந்த 11 பயணிகளுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன் விமான நிலையத்திலும் இந்தியா வரும் 950 பயணிகளை பரிசோதனை செய்ததில் 11 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே கொரோனா தொற்றுடன் இங்கிலாந்தில் இருந்து டெல்லி திரும்பி ஆந்திராவுக்கு ரயிலில் மகனுடன் சென்ற பெண், ராஜமுந்திரி அருகே ரயிலில் இருந்து அதிகாரிகளால் இறக்கப்பட்டார்.
பின்னர் அவர் மகனுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் இங்கிலாந்தில் இருந்து வந்த 2 ஆயிரத்து 724 பயணிகளில் 996 பயணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Comments