தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ 6380 கோடி நிதி மோசடி : அக்ரிகோல்டு குழும முதன்மை நிர்வாகிகள் கைது
தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நிதி மோசடி செய்த அக்ரிகோல்டு குழுமத்தின் மூன்று நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.
32 லட்சம் வாடிக்கையாளர்களிடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக இந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அவ்வா வெங்கட ராமா ராவ் தமது ஏழு சகோதரர்களுடன் 150 நிறுவனங்களைத் தொடங்கி பல்வேறு மக்களை விளைநிலங்களையும் பிளாட்டுகளையும் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments