திமுக கிராமசபை பிரச்சார கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது- மு.க.ஸ்டாலின்

0 2605
திமுக கிராமசபை பிரச்சார கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது- மு.க.ஸ்டாலின்

தி.மு.க. கிராம சபைப் பிரச்சாரக் கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இனி 'மக்கள் கிராமசபைக் கூட்டம்' என்ற பெயரில் நடத்தப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தி.மு.க. “கிராமசபை” கூட்டத்தைத் தடுக்க முயல்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் பிரச்சாரத்தை “வழக்குகளை”க் காட்டி முடக்கி விட முடியாது என்றும் திமுகவின் 700 நிர்வாகிகள் - 16500 கிராமங்கள்/வார்டுகளை நோக்கி - மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும் தொடரும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments