மானுடப் பண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்

0 1489
மானுடப் பண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்

மானுடப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் உடல்நலக் குறைவு காரணமாக நெல்லையில் காலமானார். அவருக்கு வயது 71.

முனைவர் பட்டம் பெற்ற இவர், இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி மற்றும் நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார்.

அறியப்படாத தமிழகம் உள்ளிட்ட 17 நூல்களை அவர் எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பரமசிவன், நேற்று மாலை காலமானார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

தொ.பரமசிவன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments