பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் வேற்றுகிரகவாசிகள் வசிக்கிறார்களா? அண்மையில் கண்டறியப்பட்ட ரேடியோ அலைகள் குறித்து புதிய தகவல்..!
அண்மையில் கண்டறியப்பட்ட ரேடியோ சமிக்ஞை ஒலிகள், வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய சமிக்ஞையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வின்போது, "சூப்பர் எர்த்" என்ற கிரகம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த "சூப்பர் எர்த்" கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கு ஏற்றச் சூழல் இருக்கலாம் என வானியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனைத் தொடர்ந்து, அந்த சூப்பர் எர்த் கிரகத்தை நோக்கி, கடந்த 2017ஆம் ஆண்டு, ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டன.
இதன் முடிவுகள் முழுமை அடைய 24 ஆண்டுகள் ஆகும் என்பதால், 2041மாவது ஆண்டில், வேற்று கிரகவாசிகளோடு, தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகக் கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, அண்மையில் கண்டறியப்பட்ட ரேடியோ அலைகள், நீண்ட தூரத்தில் இருந்து வந்தவை அல்ல என்றும், அவை, பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமாக பிராக்சிமா செண்டூரியிலிருந்து வரப்பெற்ற சப்தம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Comments