சுற்றுச்சூழல்த்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் லாக்கரில் சோதனை : ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்
சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கர்களை சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், 50 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பாண்டியனின் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 1 கோடியே 37 லட்ச ரூபாய் , 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சென்னையில் உள்ள கோ-ஆப்ரேட்டிவ் வங்கியொன்றில், பாண்டியனின் லாக்கரை, உரிய அனுமதியோடு திறந்து பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கணக்கில் வராத, 50 லட்ச ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
Comments