கிராம சபை கூட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது.! - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக உள்ளாட்சித்துறை உத்தரவு
கிராம சபை என்ற பெயரில், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுக்க, மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என, தமிழ்நாடு அரசின் உள்ளாட்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில அரசியல் கட்சிகள், கிராம சபை என்ற பெயரில், அரசியல் சார்ந்த பொதுக் கூட்டங்களை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என்றும், உள்ளாட்சி அமைப்பை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கிராம சபை கூட்டுவதற்கு, ஊராட்சி மன்ற தலைவருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தனி நபர்கள், கிராம சபை என்ற பெயரில் கூட்டங்களை முன்னெடுக்க அனுமதிக்க கூடாது என, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments