மருத்துவக் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் விவகாரம் : வாய்ப்பை தவற விட்ட 4 மாணவர்களுக்காக தலா ஒரு சீட் ஒதுக்கி வைக்க உத்தரவு
அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பிற்கு முன்பாக, வாய்ப்பை தவற விட்ட 4 மாணவர்களுக்கு மருத்துவம், பல்மருத்துவ இடங்களை ஒதுக்கி வைக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட MBBS - BDS சீட் இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் வழங்க வேண்டும் என்றார்.
அரசுப்பள்ளி மருத்துவ மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்பதால், தகுதியான மருத்துவர்கள் அதிகளவில் வருவார்கள் என நீதிபதி கூறினார்.
மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பான முடிவை எடுத்ததாக பாராட்டு தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Comments