"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
திருச்சியில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து 5 வயது சிறுவன் பலி
திருச்சியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரேம்குமார் - நளினி தம்பதியின் 5 வயது மகன் யஷ்வந்த் நேற்று மாலை 4 மணிக்கு வெளியே சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிபோன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மகன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வீட்டின் எதிர்புறம் இருந்த கழிவுநீர் கால்வாயில் பார்த்த பெற்றோர் மகன் யஷ்வந்த் அதில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கொய்யா பழம் பறிக்க சென்ற யஷ்வந்த் தவறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments