காதலி கழற்றிவிட்டதால் ஆத்திரம்..! கழுத்தை நெறித்துக் கொலை செய்து தீ வைத்த முன்னாள் காதலன்

0 12529
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சினேகலதா என்ற 19 வயது இளம்பெண் நேற்று முன்தினம் மாயமான நிலையில்,பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கூட்டி ராஜேஷ் என்பவனை பிடித்து விசாரித்துள்ளனர். அவன் ஒரு கொத்தனார் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

எஸ்பிஐ வங்கியில் வேலைக்கு சேர்ந்த பிறகு, சினேகலதா தன்னை ஒதுக்கத் தொடங்கியதாகவும், கல்லூரியில் உடன்படித்த பிரவீன் என்பவனோடு நெருங்கிப் பழகத் தொடங்கியதாகவும் கூட்டி ராஜேஷ் கூறியுள்ளான். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கூட்டி ராஜேஷ் சினேகலதாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, தீ வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments