ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல்

0 7134
ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுக்கூட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்த்துப் பத்து அணிகள் பங்கேற்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஐசிசி இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவற்றை இந்தியாவில் நடத்துவதற்கு வரி விலக்கு வழங்கும்பட அரசிடம் கோரிக்கை விடுப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments