துபாயில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
துபாயில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் - ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்து இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து கொரோனாவைத் தடுப்பதில் 95 விழுக்காடு செயல்திறன் மிக்கது எனச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
Comments