வரி வழக்கில் வோடபோனுக்குச் சாதகமாகச் சிங்கப்பூர் தீர்ப்பாயம் தீர்ப்பு... நெதர்லாந்து பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல் முறையீடு
வோடபோன் நிறுவனத்திடம் மூலதன ஆதாய வரியைக் கேட்கக் கூடாது எனச் சிங்கப்பூர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது.
வோடபோன் நிறுவனம் ஹட்சிசன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் மூலதன ஆதாய வரியாக 12ஆயிரம் கோடி ரூபாயும், அதைச் செலுத்தாததற்கு அபராதமாக ஏழாயிரத்து 900 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்த வழக்கில் 2012ஆம் ஆண்டு வோடபோனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் விதிமுறைகளை அரசு மாற்றியது. இதை எதிர்த்துச் சிங்கப்பூர் பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட்ட வோடபோன் 3 மாதங்களுக்கு முன் சாதகமான தீர்ப்பைப் பெற்றது.
இந்நிலையில் நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Comments