வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு சிறுமிக்கு கொடுமை!- 200 பேர் பட்டியலை தயாரிக்கிறது போலீஸ்

0 22139

துரையில் 16 வயது சிறுமியியை கடந்த 3 வருடங்களாக பாலியல் உறவு கொண்ட 200 பேர் கொண்ட பட்டியலை போலீஸார் தயாரித்து வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமி, ஜெயலட்சுமி என்ற உறவினரிடத்தில் வளர்ந்து வந்துள்ளார். ஜெயலட்சுமி ஏற்கெனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்று சொல்லப்படுகிறது. இவரிடம் வளர்ந்த சிறுமி 13 வயதில் பருவமடைந்துள்ளார். இதையடுத்து, சிறுமி என்றும் பாராமல் பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார் ஜெயலட்சுமி. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 200- க்கும் மேற்பட்டவர்கள் சிறுமியுடன் உறவு வைத்திருந்துள்ளனர். சிறுமியை வெளியூர்களுக்கு அனுப்பியும் ஜெயலட்சுமி பணம் சம்பாதித்துள்ளார். இதற்கு, புரோக்கர்களாக அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், சரவணபிரபு ஆகியோர் இருந்துள்ளனர். ஆட்டோ டிரைவர் சின்னதம்பி என்பவர் சிறுமியை கொண்டு சென்று விட உதவியுள்ளனர்.

image

இந்த நிலையில், மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில் உள்ள வீட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலதாவுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படையினர் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டு அங்கிருந்த சிறுமியை மீட்டனர். வீட்டிலிருந்த புரோக்கர் சரவணபிரபுவையும் கைது செய்தனர். தொடர்ந்து, ஜெயலட்சுமி மற்றும் அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம் ஆகிய 5 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ டிரைவர் சின்னத்தம்பி தப்பி விட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பணம் நிறைய கிடைக்கும் என்று கூறி தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தாகவும் தினமும் யாராவது ஒருவரிடத்தில் அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார். சில தொழிலதிபர்களுக்கும் சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, சிறுமியிடத்தில் உறவு வைத்திருந்தவர்களின் 200 க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை போலீஸார் தயாரித்து வருகின்றனர். இதில், ஒருவர் விடாமல் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபடவுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு சிறுமிக்கு கொடுமை நடந்திருப்பது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments