ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்- காளையர்கள்
அடுத்த ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, வரும் ஆண்டில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் என்றும், திறந்த வெளியின் அளவிற்கேற்ப அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்றும், மாடுபிடி வீரர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments