நேபாளத்தில் தவறுதலாக தரை இறங்கிய பயணிகள் விமானம்... தகவல் தொழில் நுட்ப குறைபாட்டால் நிகழ்ந்த சம்பவம்

0 3105

நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று தான் இறங்க வேண்டிய விமானநிலையத்திற்கு பதிலாக 250 மைல் தொலைவில் உள்ள மற்றொரு விமானநிலையத்தில் தரை இறங்கியது.

காத்மண்டில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட புத்தா விமானம் ஒன்று 69 பயணிகளுடன் ஜனக்பூர் நகருக்கு புறப்பட்டு சென்றது.

ஆனால் அங்கு தரை இறங்குவதற்கு பதிலாக அந்த விமானம் 250மைல் தொலைவில் உள்ள பொகாரோ நகரில் தரை இறங்கியது.

விமானத்தில் நேர்ந்த தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குறைபாடே இதற்கு காரணம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments