நாடு முழுவதும் கிறிஸ்துமஸை முன்னிட்டு களை கட்டிய கொண்டாட்டங்கள்
கிறிஸ்துமஸ் திருநாள் இன்று நள்ளிரவு கொண்டாடப்படுவதையெட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
ஏசு இவ்வுலகில் பாலகனாக அவதரித்த புனித நாளை கிறித்துவ மக்கள் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடுகின்றனர் . டெல்லியில் உள்ள புனித இதய கத்தீட்ரல் தேவலாயத்தில் மின்விளக்குகள் ஜொலிக்க அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் கோவாவின் பனாஜி நகரம் தேவாலயங்களால் நிரம்பியுள்ளது.இங்குள்ள மக்கள் கிறிஸ்துமசைக் கொண்டாட புத்தாடைகள், கேக்குகள், நட்சத்திரம்,ஏசு பிரான் உருவ பொம்மைகள், மின்விளக்குகள், வண்ண ரிப்பன்கள், தோரணங்கள், கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றை வாங்குவதற்கு சந்தைகளில் பெரும் திரளாகத் திரண்டனர்
இதே போன்று வாரணாசி நகரின் சந்தைகள் கிறிஸ்துமஸால் களை கட்டின. அழகான கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களையும் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்..கூட்ட நெரிசல் காரணமாக சாலையில் போக்குவரத்து ஊர்ந்து சென்றது.
Comments