டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்கிற்கு, ஆனந்த் மகிந்திரா சவால்? நெட்டிசன்கள் பலர் நகைச்சுவையுடன் கருத்து பதிவு...
மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கிற்கு, மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அம்பாசிடர் காரில் பயணிகள் அமரும் பின் பகுதியை இரு மாடுகளுடன் பூட்டி ஒருவர் ஓட்டிச் செல்கிறார். இதைப்போன்ற குறைந்த செலவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் காருடன், டெஸ்லாவை பொருத்திப் பார்க்க முடியும் என்று தனக்கு தோன்றவில்லை என்று ஆனந்த் மகிந்திரா எலான் மஸ்கை டேக் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலர் நகைச்சுவையுடன் கருத்து பதிவிட்டுள்ளனர்.
I don’t think @elonmusk & Tesla can match the low cost of this renewable energy-fuelled car. Not sure about the emissions level, though, if you take methane into account... pic.twitter.com/C7QzbEOGys
Comments