இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

0 5871
இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

ங்கிலாந்தில் இருந்து, தமிழ்நாடு திரும்பியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், ஆரோவில், மரக்காணம், வானூர், காணை ஆகிய பகுதிகளை சேர்ந்த 11 பேர், சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கி, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூரில் 3 பேரும், பொள்ளாச்சியில் ஒருவரும், தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து வந்த, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, கொரோனா சோதனை நடைபெற்றதுடன், இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments