கிரேட்டர் நொய்டாவிலுள்ள கார் தயாரிப்பு ஆலையை மூடுகிறது ஹோண்டா?
கிரேட்டர் நொய்டாவிலுள்ள கார் தயாரிப்பு ஆலையை மூடுவதை உறுதிப்படுத்தியுள்ள ஜப்பான் நாட்டின் ஹோண்டா நிறுவனம், சிவிக், சிஆர்வி கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ராஜஸ்தானின் தபுகராவிலுள்ள ஆலைக்கு, மொத்த உற்பத்தியையும் மாற்றி இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த ஹோண்டா சிட்டி கார்கள் இனி 5500 ஊழியர்கள் பணிபுரியும் தபுகரா ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகி வந்த சிவிக், சிஆர்வி கார்களை அங்கு உற்பத்தி செய்ய அதிக முதலீடு தேவைப்படும் என்பதால் அதன் உற்பத்தியை நிறுத்துவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments