கொரோனா வைரஸ் உருமாற்றம்.! இயல்பானது.! அச்சப்படாதீர்.!-தமிழக சுகாதாரத்துறை
இங்கிலாந்தில் பரவும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள், திங்கட்கிழமைக்குள் வெளியாக உள்ளது. ஒரு வைரஸ் உருமாற்றம் பெறுவது இயல்பான ஒன்று தான் என்றும், எனவே, பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில், மரபியல் மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. இருப்பினும், கொரோனா தடுப்பூசிகளும், ஏற்கனவே உள்ள தடுப்பு நடவடிக்கைகளுமே, போதுமானது என, இந்திய மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கையூட்டுகின்றனர்.
இங்கிலாந்து மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்புவோர், தங்களது பயணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என, சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே, தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதாக, சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது, புதிய வகை கொரோனா வைரஸ் அல்ல என்றும், மரபியல் மாற்றம் மட்டுமே அடைந்திருக்கிறது. எனவே, பொதுமக்களுக்கு தேவையற்ற பீதி, தேவையில்லை என்றும், சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ், இதுவரையில், 17 முறை, மரபியல் ரீதியாக மாற்றம் பெற்றிருப்பதாகவும், சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியுள்ளார்.
கொரோனா மட்டுமின்றி, எந்தவொரு வைரசும், உருமாற்றம் அடைவது இயல்பான ஒன்று தான் என்பதால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏற்கனவே, உள்ள தடுப்பு வழிமுறைகளான, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவது போன்றவற்றை கடைபிடித்தாலே, கொரோனா மட்டுமின்றி, எளிதில் பரவும் எந்த வைரஸ் பாதிப்பிலிருந்தும் தப்பிக்கலாம் என வழிகாட்டுகிறது சுகாதாரத்துறை.
Comments