இறப்பில் சந்தேகம்:38 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட 87 வயது முதியவரின் உடல்

0 4506
தேனி மாவட்டம் போடி அருகே 38 நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட 87 வயது முதியவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே 38 நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட 87 வயது முதியவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

சிந்தலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சலேத் என்ற அந்த முதியவர் கடந்த 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உடல் புதைக்கப்பட்டு கல்லறையும் கட்டப்பட்டது.

முதியவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், மூத்த மகன் வழி பேரன் எபினேஸ் என்பவர் தாத்தாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசில் புகாரளித்தார்.

சொத்துக்காக தனது சித்தப்பா குடும்பத்தினர் அவருக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லறையிலிருந்து முதியவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments