மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் : டிச.25ல் ரூ.18,000 கோடி விடுவிப்பு

0 3302

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் அடுத்த கட்டமாக வரும் 25 ஆம் தேதி 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.

ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகள் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 3வது மற்றும் இறுதி தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு நிதியை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் விடுவிக்க இருப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments