கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று சிலர் கூறுவதாக கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று சிலர் கூறுவதாகவும், இது மக்களை ஏமாற்றும் வேலை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றும் பாடுபடும் இயக்கம் தி.மு.க. என்றார்.
ஆனால் கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று சிலர் கூறுகிறார்கள் இது மக்களை ஏமாற்றும் வேலை என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயி என கூறும் முதல்-அமைச்சர், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் சந்தித்து பேசாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Comments