வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர-மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

0 1620
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள பரிந்துரையில், தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் இணைப்பில் சென்று வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளது.

தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தி தர மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  பரிசீலிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments