கடன் வழங்கும் மொபைல் ஆப் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை-ஜெகன்மோகன் ரெட்டி

0 6067
மொபைல் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மொபைல் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மொபைல் ஆப் மூலம் கடன் வாங்குபவர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிரட்டி சித்ரவதை செய்வதால், தற்கொலை போன்ற விபரீத முடிவை சிலர் எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதனைத் தடுக்கும் விதத்தில் ஆந்திராவில் மொபைல் ஆப் கடன் தொடர்பாக புகார்கள் வந்தால்  கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, போலீஸ் சேவை ஆப் மூலமோ புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments