கூட்டணி அமைக்க ரூ.1000 கோடி வரை பாமக பேரம் என குற்றச்சாட்டு : தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க 24 மணிநேரம் கெடு

0 6836
கூட்டணி அமைக்க ரூ.1000 கோடி வரை பாமக பேரம் என குற்றச்சாட்டு : தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க 24 மணிநேரம் கெடு

தேர்தலில் கூட்டணி அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் வரை பாமக பேரம் பேசுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு, 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க, திமுக எம்பி தயாநிதிமாறனுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என ஓமலூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்‍.

அதற்கு கடந்த தேர்தலில் 400 கோடி ரூபாய் அளவிற்கு பேரம் பேசிய பாமக, இந்த முறை 1000 கோடி ரூபாய் அளவிற்கு பேரம் பேசுவதாகவும், அத்தகைய தொகை திமுகவிடம் இல்லை என தெரிவித்தார்

பேரம் பேசுகிறது பாமக என்ற இந்த புகார் தொடர்பாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாமக தலைவர் ஜி.கே.மணி, தயாநிதிமாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments