இலவசப் பட்டாக்கள் நடைமுறை.. முறைகேடுகள் என சந்தேகம் -லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
இலவசப் பட்டாக்கள் நடைமுறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என ஐயம் எழுந்திருப்பதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
இதுதொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்திர அமர்வு இன்று தீர்ப்பளித்தது. ஏழை மக்கள் பயன்பறும் வகையில் வழங்கப்படும் இலவசப் பட்டாக்கள் நடைமுறையில், பல முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆகவே, தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட, இலவசப் பட்டாக்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டனர்.
Comments