நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் திரைக்கு வருவதில் மீண்டும் சிக்கல்
மாஸ்டர் திரைப்படத்தை அதிக விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் மறுப்பதாலும், U/A சான்றிதழ் வழங்க தணிக்கை அமைப்பு மறுப்பதாலும், படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே ரிலீஸ் தள்ளி போன நிலையில், பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அந்த பணத்தை திரும்ப கேட்டதாக கூறபடுகிறது.
லாபம் கிடைக்கவில்லை எனில் வட்டியுடன் நஷ்டத்தை ஈடுசெய்ய தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டபோதும், அதை சில விநியோகஸ்தர்கள் ஏற்கவில்லை எனவும் சொல்லபடுகிறது. இதேபோல் ஆபாச காட்சிகளை சுட்டிக்காட்டி, அதை நீக்காவிட்டால் ஏ சான்றிதழ் தான் வழங்கப்படும் என சென்சார் போர்டு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
Comments