இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் மோதிய மாநகராட்சி குப்பை லாரி : இளம்பெண் உயிரிழப்பு

0 2467
இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் மோதிய மாநகராட்சி குப்பை லாரி : இளம்பெண் உயிரிழப்பு

மதுரையில் மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

அவனியாபுரத்தைச் சேர்ந்த துர்காதேவி என்ற அந்தப் பெண், நேற்று காலை தனது சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றிருக்கிறார்.

கீழவெளி பகுதியில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்தைக் கடக்க முயன்றபோது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க தனது வாகனத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த மாநகராட்சி குப்பை லாரி, துர்காதேவி சென்ற இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த துர்கா தேவியின் தலை அங்கிருந்த சிமெண்ட் கட்டையில் பலமாக மோதியதில் படுகாயமடைந்தார்.

கண் முன்னால் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த தங்கையை கையில் தூக்கிக்கொண்டு அவரது சகோதரர் கதறித் துடித்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துர்காதேவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில் குப்பை லாரி ஓட்டுநர் பாண்டி கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த துர்காதேவிக்கு அண்மையில்தான் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments