டெஸ்லா நிறுவனத்தை விற்க எண்ணி ஆப்பிள் சிஇஓ டிம் குக்கைச் சந்திக்க முயன்றபோது அவர் தன்னைச் சந்திக்க மறுத்துவிட்டதாக எலோன் மஸ்க் தகவல்
டெஸ்லா நிறுவனத்தை விற்பதற்காக ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்கைச் சந்திக்கத் தான் சென்றபோது அவர் தன்னைச் சந்திக்க மறுத்துவிட்டதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கார்களைத் தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்த நிலையில் பழைய நிகழ்வை டுவிட்டரில் எலான் மஸ்க் நினைவுகூர்ந்துள்ளார்.
2017ஆம் ஆண்டில் மின்சாரக் கார்களைப் பெருமளவில் உற்பத்தி செய்வதில் டெஸ்லா சிக்கல்களை எதிர்கொண்ட நேரத்தில் நிறுவனத்தை விற்க எண்ணி டிம் குக்கைச் சந்திக்கத் தான் முயன்றதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அப்போது டெஸ்லா நிறுவனத்தை இப்போதுள்ள மதிப்பைவிடப் பத்தில் ஒரு பங்குக்கு விற்க முடிவு செய்து சென்ற நேரத்தில் டிம் குக் தன்னைச் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Comments