முதலும் கடைசியும் ரன் அவுட்தான் !- தோனியின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் ருசிகரம்

0 4499

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டிசம்பர் 23 ஆம் தேதிதான் முதன் முதலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். தோனியின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும் கடைசி ஒருநாள் போட்டியிலும் ரன் அவுட் மூலமே பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மார்ட்டின் கப்தில் தோனியை ரன்அவுட் செய்து விடுவார். இதனால், இந்திய அணி தோல்வியை தழுவி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியாமல் போனது. தோனி ஆடிய கடைசி சர்வதேச ஆட்டமும் இதுதான். அதற்கு பிறகு, வேறு எந்த சர்வதேச ஒருநாள் ஆட்டங்களிலும் தோனி விளையாட வில்லை. தற்போது, அனைத்து விதமானசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்திய அணியின் கேப்டன்களில் பல சரித்திரங்களை படைத்தவர் தோனி. உலகக் கோப்பை, டி 20 கோப்பை, சாம்பியன் கோப்பை என ஐ.சி.சி.யின் முக்கிய மூன்று தொடர்களில் கோப்பையை வென்ற ஒரே இந்திய கேப்டன் தோனிதான். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோனி முதன்முதலாக டிசம்பர் 23 - ஆம் தேதிதான் களமிறங்கினார். வங்க தேசத்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தெண்டுல்கர் , கங்குலி சோபிக்கவில்லை. எனினும், ஆபத்பாந்தவன் ராகுல் டிராவிட்ர அரை சதம் அடித்தார். முகமது கைஃப் 80 ரன்கள் அடித்தார்.

இந்த ஆட்டத்தில்தான் முதன் முதலாக தோனி இந்திய அணிக்காக 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். முதல் பந்தை சந்தித்த தோனி, பந்தை தட்டி விட்டு ரன் எடுக்க ஓடினார். ஆனால், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாகி போனார். முதல் போட்டியில் டக் அவுட்டாகி தோனி பெவிலியன் திரும்பினார். எனினும், இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் 3 ஒருநாள் போட்டிகளிலும் மொத்தமே 19 ரன்கள்தான் தோனி எடுத்தார். ஆனால், 2005 - ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தோனி சேர்க்கப்பட்டார்.பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்திலும் தோனி 3 ரன்களில் அவுட்டாகி விட, அடுத்த ஆடடத்தில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.

ஆனாலும், இந்திய அணியின் அப்போதையை கேப்டன் சவுரவ் கங்குலி தோனிக்கு தன் 5 வது ஒருநாள் சர்வதேச ஆட்டத்திலும் அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விளையாட வாய்ப்பளித்தார். அதோடு, 3- வது விக்கட்டாகவும் தோனியை பேட் செய்ய களமிறக்கினார். இந்த போட்டியில் தோனி 123 பந்துகளில் 148 ரன்களை விளாச, ' யாராடா பரட்டை வைத்த பையன்' என்று இந்தியாவே திரும்பி பார்த்தது. அதற்கு பிறகு, தோனி மட்டும் திரும்பி பார்க்கவே இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments