ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் பகல்பத்து 9ம் நாள் விழா : முத்துக்குறி சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி

0 1747
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் பகல்பத்து 9ம் நாள் விழா : முத்துக்குறி சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோயிலில் பகல்பத்து 9ம் நாள் திருநாளையொட்டி முத்துக்குறி சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான தலமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோயில் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாசதியையொட்டி பகல் பத்து திருநாள் விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டுக்கான பகல் பத்து திருநாள் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் 9ம் நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் புறப்பட்டு அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments