சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி... சீரடைந்த போக்குவரத்து பிரச்சனை
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பிரச்சனை சீரடைந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மின்சார ரயில்களின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டபோது, முன்களப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்களுக்கு மட்டும் என குறிப்பிட்ட அளவு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்களும் நிறுவனம் சார்பில் அனுமதி கடிதம் பெற்று பயணிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், புறநகர் ரயில்களில் இன்று முதல் பொதுமக்களும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்தது.
போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கும் காலை 7 மணி முதல் 9.30 வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிபந்தனையோடு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 8 மாதங்களாக நீடித்த பொதுமக்களின் போக்குவரத்து பிரச்சனை சீரடைந்துள்ளது.
Comments