ஜனவரி 1 முதல் சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படும் - மாநகராட்சி ஆணையர்

0 2523

சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம், ஜனவரி 1 ஆம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி, கழிவு உருவாக்குபவர்களை வகைப்படுத்தி, அதற்கேற்ப பயனாளர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

500 முதல் 2400 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் கட்டணமும், உணவகங்கள், அலுவலகங்கள், திரையரங்குகள் திருமண மண்டபங்களுக்கு 300 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமும் விதிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments