கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியாருக்கு என்ன தண்டனை? விவரம் இன்று அறிவிப்பு

0 2481

கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் மற்றும் மற்றொரு கன்னியாஸ்திரிக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா, பயஸ் டென்த் கான்வென்டில் கடந்த 1992ம் ஆண்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.  சிபிஐ நடத்திய விசாரணையில், அவருடன் பணியாற்றிய பாதிரியார் தாமசுக்கும், கன்னியாஸ்திரி செஃபிக்கும் தவறான பழக்கத்தை அபயா பார்த்ததால் இருவரும் அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தாமசும் செபியும் குற்றவாளிகள் என்று கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments