இங்கிலாந்து - இந்தியா: விமானசேவை தற்காலிக நிறுத்தம்

0 2222
இங்கிலாந்து - இந்தியா: விமானசேவை தற்காலிக நிறுத்தம்

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து, இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் வந்திறங்கிய 20க்கும் மேற்பட்டோருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, அமிர்தசரஸ், கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய விமானநிலையங்களில் வந்திறங்கிய பயணிகளுக்கு கட்டாய பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

கடைசியாக நள்ளிரவில் லண்டனில் இருந்து இரண்டு விமானங்களில் டெல்லி வந்தவர்களுக்கும் சோதனை கட்டாயமாக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமானசேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் தாயகம் திரும்பும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பரிதவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நவம்பர் 25ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானால் அவர்களின் மாதிரிகளை புனேவிற்கு அனுப்ப வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் சுய தனிமை அவசியம் என்றும், இங்கிலாந்தில் இருந்து வருவோர் தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்திக் கொள்வது அவசர அவசியம் என்பதை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு 14ஆவது நாளில் கொரோனா உறுதியானாலும், அடுத்த 14 நாட்களுக்கு பரிசோதனையை தொடர வேண்டும் என்றும், தொடர்ச்சியாக, 2 அல்லது 3 முறை நெகட்டிவ் என வந்தால் மட்டுமே, அவர்களுக்கு பெருந்தொற்று பாதிப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது புதிய பரிணாமத்தில் பரவும் கொரோனா வைரஸ் இளையோரையே அதிகம் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments