குலுக்கல் முறையில் செல்போன் எண்களுக்கு பரிசு எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆந்திர போலீசாரால் கைது
ஆந்திராவில் செல்போன் எண்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் கூறி பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டான்.
சித்தூர் பகுதியில் செல்போன் வாடிக்கையாளர்களை அழைக்கும் சில பெண் குரல்கள், அவர்களது எண் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் விலையுயர்ந்த செல்போன்கள், லேப்டாப்புகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் கூறி பண வசூல் செய்து வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து தரமற்ற பொருட்களை வரவழைத்து கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமிருந்து ஒரு பி.எம்.டபுள்யூ கார், ஏராளமான செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
வீடு ஒன்றில் கால் சென்டர் வைத்து, 10க்கும் மேற்பட்ட பெண்களை பணியமர்த்தி, அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments