வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 28 கோடி ரூபாய் வருவாய்

0 2284
வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அந்த கோவிலில் வரும் 25-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக 20 ஆயிரம் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்கள் ஸ்ரீவாரி அறக்கட்டளை மூலம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதன் மூலம் தேவஸ்தானத்திற்கு 22 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

சிறப்பு தரிசனத்திற்காக 300 ரூபாய் கட்டணத்தில் 2 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்ததன் மூலம் தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments