சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
28-ந் தேதி தங்க தேரோட்டத்தை நடத்த 100 பேருக்கும், 29-ந் தேதி நடராஜர் தேரோட்டத்துக்கு 1,000 பேர், சிவகாம சுந்தரி அம்மன் தேரோட்டத்துக்கு 400 பேர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேரோட்டங்களுக்கு தலா 200 பேர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments