புத்தாண்டு முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்

0 2263
2021 புத்தாண்டு முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2021 புத்தாண்டு முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், கடந்த மாதம் முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை கொண்டு செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் நட்சத்திர நடிகர்களின் திரைபடங்கள் ரிலீஸ் ஆகாததால் திரையரங்கிற்கு மக்கள் போதிய எண்ணிக்கையில் வரவில்லை.

இந்த நிலையில் வரும் பொங்கல் முதல் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வரிசையாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புத்தாண்டு முதல் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments